பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளிய காரைக்கால் அம்மையார் 
செய்திகள்

மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு!

காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

DIN

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நாயன்மார்கள் 63-இல் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது.

தேரில் எழுந்தருளும் காரைக்கால் அம்மையார்

இத்திருவிழா தொடக்கமாக கடந்த 19-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு காரைக்கால் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்தர் (மாப்பிள்ளை) அம்மையார் கோயிலுக்கு குதிரை வாகனங்கள் பூட்டிய இந்திர விமானத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். 20-ஆம் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, இரவு பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-ஆம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை அதிகாலை கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் வீற்றிருக்கும் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை விளக்கும் வகையில், பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்டு, வீதியுலா புறப்பாடு தொடங்கியது. இந்நிகழ்வில் புதுவை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மாங்கனிகளை இறைக்கும் பக்தர்கள்

வேதபாராயணம் முழங்க, சிறப்பு மேளம், நாகசுரம், ராஜவாத்தியங்கள் இசைக்க காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளில் சப்பரம் செல்கிறது. சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் தளத்தில் நின்றவாறு மக்கள், பக்தர்களை நோக்கி மாங்கனிகளை இறைக்கின்றனர். திருமணம், குழந்தைப் பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் செய்துகொள்ளும் விதமாகவும், நேர்த்திக்கடன் நிவர்த்தியாகவும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இறைக்கப்படும் மாங்கனியைப் பிடித்து இறைவனின் பிரசாதமாக கருதி வீட்டுக்கு பக்தர்கள் கொண்டுசெல்கின்றனர்.

சப்பரத்தின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்ல, பிச்சாண்டவர் சப்பரம் பக்தர்கள் மத்தியில் பொறுமையாக நகர்ந்து செல்கிறது. முக்கிய வீதிகன் வழியே பவழக்கால் சப்பரம் இன்று மாலை அம்மையார் கோயிலை சென்றடைந்ததும், புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது. அம்மையார் கோயிலில் பிச்சாண்டவருக்கு அமுது படையல் வழிபாடு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT