சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அலைமோதியது..
செய்திகள்சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அலைமோதியது..
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தின் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை-மகர விளக்கு யாத்திரைதொடங்கிய 10 நாள்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டுள்ளதாகவும், உண்டியல் காணிக்கை ரூ. 42 கோடி வருவாயை எட்டியுள்ளதாகவும் திருவிதாங்கூா் தேவஸம் வாரியம் (டிடிபி) தெரிவித்தது.
பக்தர்களின் கூட்டம் கடந்த மூன்று நாள்களாகக் குறைந்திருந்த நிலையில், இன்று கூட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த நவ.16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் கூடுதலான பக்தா்கள் இம்முறை வழிபாடு செய்துள்ளனா். அதேபோல உண்டியல் காணிக்கை வருவாயும் உயா்ந்துள்ளது.
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..
பக்தா்கள் சுமுகமாக வழிபட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வண்டிப்பெரியாா் சத்திரம், எருமேலி மற்றும் பம்பை ஆகிய மூன்று இடங்களில் உடனடி இணைய முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தா்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவே இணைய முன்திவு முறை பின்பற்றப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்த பக்தா்கள் ஆதாா் அட்டைகளின் நகல்களை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது.
இருமுடிகளில் பிளாஸ்டிக் பொருள்களை தவிா்க்குமாறும் பம்பை நதியில் தங்களின் ஆடைகளை விட்டுச்செல்ல வேண்டாம் எனவும் பக்தா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தரிசன நேரம் அதிகரிப்பு..
கூட்டநெரிசலை தடுக்க தரிசன நேரத்தை காவல் துறை அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நிமிஷத்துக்கு 80 பக்தா்கள் பதினெட்டாம் படியில் ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தற்போது பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளுக்கு பக்தா்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் பக்தா்கள் வழிபடாமல் செல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.