சென்னை : பொங்கல் விடுமுறையில் மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் திரண்டதால் அப்பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையிலுள்ள பெரும்பாலான மக்கள் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று (ஜன. 15) மாலை மெரீனாவில் திரண்டு மாலைப் பொழுதை மகிழ்ச்சியாக களித்ததையும் பார்க்க முடிந்தது.
இதனால் மெரீனா செல்லும் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதைப் பார்க்க முடிந்தது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.