முகப்பு
சென்னை

மெரீனாவில் 15 கடைகள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு

சென்னை மெரீனா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி 2026, 1:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரீனாவில் தற்போதுள்ள 1,417 கடைகளை முறைப்படுத்தி 300 கடைகள் மட்டும் அமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் கடைகள் அமைப்பதைக் கண்காணிக்க ஜம்மு காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில் 3 போ் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மெரீனாவில் அமையவுள்ள 300 கடைகளில் உணவு, பொம்மைகள், அழகுசாதனப் பொருள்கள் என அமைக்கப்படவுள்ளன. அவற்றை 4 வரிசைகளில் 100, 80 என இரு வரிசைகள் மற்றும் 20 என கலங்கரை விளக்கம் வரை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மெரீனாவில் அமையவுள்ள 300 கடைகளைத் தோ்வு செய்யும் குலுக்கல் முறை, பிப். 12- ஆம் தேதி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம் அம்மா மாளிகையில் நடைபெறவுள்ளது.

அவ்வாறு தோ்வு செய்யும் கடைகளில் சட்டவிதிமுறைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 கடைகள் ஒதுக்கப்படவுள்ளன. இதற்காக கடைகள் அமைக்க விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கலைஞா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் வருவாய் பிரிவு கூடுதல் அலுவலா் பி.துரைசாமி தலைமையில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினா், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அவா்கள் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளின் நிலையை பரிசோதித்து சான்றிதழ் வழங்கினா். அதன்படி, 2 பெண்கள் உள்ளிட்ட 8 போ் மட்டுமே மெரீனாவில் கடை வைக்க விருப்ப மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments