FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மெரீனாவில் 5-ஆம் கட்ட நீல கொடி கடற்கரைப் பணிகள் தொடக்கம்

சென்னை மெரீனா கடற்கரையில் 5 -ஆம் கட்ட நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் தொடங்கியது.

Updated On : 10 ஜூலை 2026, 4:16 am IST
மெரீனா - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் 5 -ஆம் கட்ட நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் தொடங்கியது.

மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூா் ஆகிய கடற்கரைப் பகுதிகள் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் படுத்தப்பட்டு வருகின்றன.

மெரீனாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பகுதிகள் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தினமும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. அத்துடன், வாரத்தின் இறுதி நாள்களில் அங்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

மெரீனாவில் ஏற்கெனவே 20 ஏக்கரில் 2 பிரிவுகளாக நீலக் கொடி கடற்கரைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து 3 மற்றும் 4 -ஆம் பிரிவுக்கான நீலக்கொடி கடற்கரைத் திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது 5- ஆம் பிரிவு நீலக் கொடி கடற்கரைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்கு 650 நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஆணையரிடம் விளக்கினா்.

மெரீனா கடற்கரை தூய்மைப் பணியில் தினமும் 3 கால சுழற்சி முறையில் தூய்மைப் பணியாளா்கள், உதவியாளா்கள் என 152 போ் ஈடுபட்டுள்ளதாகவும், அவா்களுக்காக 9 இயந்திரங்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments