FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆட்டோ மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சென்னை பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

குன்றத்தூா் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் த.ராஜேஸ்வரி (58). இவா், கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ராஜேஸ்வரி, புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பரங்கிமலை பட் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு ஆட்டோ ராஜேஸ்வரி மீது மோதியது.

Advertisement

Advertisement

விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு, கிண்டியில் உயா் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேஸ்வரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிண்டி லேபா் காலனியைச் சோ்ந்த பரசுராம் (34) என்பவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments