முகப்பு
செய்திகள்

வரம் தரும் வாரம்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:33 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 18 - 24) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை உயர்வாக அமையும். ஆன்மிக, தர்மச் சிந்தனைகள் மேலோங்கும். நடக்காது என்று நினைத்தவை நடந்தேறும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். வியாபாரிகள் கவனக் குறைவால் சிறிது நஷ்டம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

Advertisement

அரசியல்வாதிகள் பிறருக்கு உதவுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தைச் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வருமானத் தடை நீங்கும். உடல் ஆரோக்கியமும் சீராகும். தெளிந்த மனதுடன் இருப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருள்களால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்காமல் மௌனமாக இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு மனதில் இருந்த அவநம்பிக்கைகள் அகலும். பெண்கள் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள். மாணவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டாகும். குடும்ப வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ரகசியங்களைக் காக்கவும். அந்தஸ்து உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை கச்சிதமாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். விவசாயிகள் பொறுமையாக வழிநடத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு பாராட்டும் பதவியும் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்திலும், தர்மக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவளிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் ஏற்றமாகத் தொடரும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். கடன் தொல்லைகள் குறையும். வழக்குகளிலும் திருப்பம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவல் வேலைகளைத் திறம்பட செய்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகளில் ஈடுபடலாம். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களில்

கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினர் உன்னத நிலையை அடைவீர்கள்.

பெண்களுக்கு இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நல்ல நட்பை உருவாக்குவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கடினமாக உழைத்து காரியங்களைச் சாதிப்பீர்கள். பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளைத் தேடி பதவிகள் வரும். கலைத் துறையினர் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.‘

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெரியோர்களின் ஆதரவு உந்துசக்தியாக அமையும், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நிம்மதி நிறையும். மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் தனித்துச் செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் நிலப் பிரச்னைகளில் தீர்வு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவாய் இருப்பார்கள் கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு பணவரவில் குறை இருக்காது. மாணவர்கள் பிரச்னைகளைத் தவிருங்கள்.

சந்திராஷ்டமம் - அக். 18, 19.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். வாகனங்களைப் பழுது பார்க்கும் செலவு உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 20, 21.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் வெற்றிகள் குவியும். குழந்தைகளால் எண்ணங்கள் ஈடேறும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகள் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி லாபமாக இருக்கும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். கலைத் துறையினரின் பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - அக். 22, 23.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி அமையும். குடும்பப் பொறுப்புகளை ஏற்பீர்கள். காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நட்பு வட்டாரம் விரிவடையும். பெண்கள் உறவினர்களுடனான அன்புடன் இருப்பீர்கள் மாணவர்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - அக். 24.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

விவேகத்துடன் செயல்படுவீர்கள். சுப காரியங்கள் நிகழும். புதிய பொறுப்புகள் தேடி வரும். உணவு விஷயங்களில் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். வியாபாரிகளின் நோக்கம் நிறைவேறும். விவசாயிகளின் தொழில்நுட்பத் திறன் வெளிப்படும்.

அரசியல்வாதிகள் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு செலுத்தி வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு ஒப்பந்தப் பணிகள் வெற்றியைத் தரும். பெண்களுக்கு பொருளாதாரம் சிறிது ஏற்றமாகவே இருக்கும். மாணவர்கள் கல்வி உயர்வுக்காக முயற்சிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இயந்திரப் பணிகளில் லாபம் தரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். கை நழுவிய வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும், மனவளமும் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்.

அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் சாதகமான சூழல் தென்படும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் ஏற்படும். பெண்கள் அலங்காரப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:11 PM

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திறமைக்குத் தகுந்த செயல்களைச் செய்வீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். பேச்சில் கண்ணியம் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு பண வரவு சீராகும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் கோரிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோரும் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.