வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 27 - ஏப்ரல் 2) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும்.
உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் உயர்வைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குச் சரியான தகவல்களை அனுப்புவார்கள். கலைத்துறையினர் புதிய ரசிகர்களைப் பெறுவார்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டுவார்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
சிக்கனமாகச் செலவு செய்து சேமிப்பைக் கூட்டிக்கொள்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைப் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் அக்கறை காட்டுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய சிந்தனைகள் உதயமாகும். பெண்கள் கணவரின் அன்பு, ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு நிரம்பக் கிடைக்கும். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் உயரும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சியின்றி வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்களுக்கு நெருங்கியவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை மறையும். மாணவர்கள் பாடங்களைத் தீவிரமாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழிலை அமோகமாக நடத்துவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு மிக்கத் தலைவர்களின் தொடர்பு கிடைக்கும். கலைத்துறையினர் வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை அலங்கரிப்பார்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகளின் உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் நட்பைப் பெறுவார்கள். கலைத்துறையினர் பிரபலங்களைச் சந்தித்துப் பிரபலமடைவார்கள்.
பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் திறமையாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் உயர்கல்வியில் சேர பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவார்கள். வியாபாரிகள் சந்தையில் போட்டிகளைச் சந்திப்பார்கள்.
விவசாயிகள் புதிய உரங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு நழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவு குறையக் காண்பார்கள். மாணவர்கள் நண்பர்களுடன் அனாவசியமாகப் பொழுது போக்குவதைத் தவிர்ப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
அரசு சார்ந்த பணிகளில் இருந்த தாமதம் நீங்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் அடைவார்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். கலைத்துறையினரின் தன்னம்பிக்கை கூடும். பெண்களின் பேச்சை கணவர் கேட்டு நடப்பார். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மனதில் புதிய நற் சிந்தனை உதயமாகும். தொழிலை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் பெயர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும். வியாபாரிகள் தங்கள் பொருள்களின் விற்பனையைத் துரிதப்படுத்துவார்கள். விவசாயிகள் வயல் வரப்புச் சண்டையில் நல்ல முடிவைக் காண்பார்கள்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். கலைத்துறையினர் சீரான வருமானத்தைக் காண்பார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் பாடங்களை உற்சாகத்துடன் படிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உஷ்ணம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றி மறையும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரிகளுக்கு விற்பனை சூழ்நிலை சாதகமாக இருக்கும். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு கூடும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் ஆதரவு பெருகும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகத் தொடரும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிம்மதியும் கூடும். மாணவர்கள் தக்க உடற்பயிற்சிகளைச் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 27, 28, 29.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் மன நிம்மதி கூடும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியாமல் போகும். வியாபாரிகள் விற்பனையில் புதிய யுத்திகளைப் புகுத்துவார்கள். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்ய நேரிடும்.
பெண்கள் ஆரோக்கிய விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுதல் உறுதுணையாக அமையும்.
சந்திராஷ்டமம் - மார்ச் 30, 31.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரிகள் புதிய கிளைகளைத் திறப்பார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், அதனால் நல்ல வருமானமும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றிக் கிடைக்கும். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்களுக்கு எதிர்பாராத ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 1, 2.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைக் காண்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.
விவசாயிகள் அவசியமான இடுபொருள்கள், விதை, உரம் ஆகியவற்றுக்குச் செலவு செய்வார்கள்.
அரசியல்வாதிகளின் கருத்துகளை கட்சி மேலிடம் பரிசீலிக்கும். கலைத்துறையினர் துறையில் முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள்.
பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் பொறுப்புடனும் பொறுமையுடனும் ஈடுபடுவார்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.