முகப்பு
செய்திகள்

இந்த வாரம் உங்களுக்கு எப்படி? வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:48 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 25 - 31) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். மழலையின் வரவால் மகிழ்ச்சி பெருகும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். சமூகத்தில் புகழும் கௌரவமும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவல் விஷயமாக பயணிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

Advertisement

அரசியல்வாதிகள் புது திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் அமையும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் புது நண்பர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். மனத் தெளிவு உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்வீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் நிதானமாகச் செயல்படவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் எவரிடமும் பகைமை பாராட்டாதீர்கள். கலைத் துறையினருக்கு பணவரவு சற்று குறையும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்களுக்கான செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். செலவுக்கேற்ற வரவு இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களிடம் தேவையான ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகள் வரவு செலவுகளைக் கவனத்துடன் கையாளவும். விவசாயிகள் கடினமாக உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் அதிர்ஷ்டமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் உறவினர்களிடம் அன்பைப் பொழிவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

செயல்களைப் பொறுமையாகச் செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் கௌரவம் உயரும். தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். உடல் ஆரோக்கியமும் மனவளமும் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகள் கடையை நவீனப்படுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு பொருளாதார நெருக்கடி தீரும். மாணவர்கள் விளையாட்டில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சமயோஜித புத்தியுடன் காரியமாற்றுவீர்கள். திடீர் பயணம் செய்ய நேரிடும். சிறு சவால்களைச் சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழலில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகள் கால்நடைகளால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறனை மேலிடம் பாராட்டும். கலைத் துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் புத்துணர்ச்சிடன் இருப்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உடலில் சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

உடன்பிறந்தோரிடம் கனிவாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் லாபமாக அமையும். விவசாயிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர் கடும் போட்டிகளுக்கு இடையே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு

பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பணப் புழக்கம் அதிகரிக்கும். கடன்களை வாங்க மாட்டீர்கள். உடனிருப்போரை அதிகம் நம்ப வேண்டாம். எடுத்த காரியங்களை விரைந்து முடித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புது நுட்பங்களைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களை அன்போடு நடத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினர் கவனத்துடன் செயல்படவும். பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் சிறக்கும். ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களின் வருகை மிகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி, பொறாமை அதிகரிக்கும். விவசாயிகள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தகளைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் விருப்பப்பட்ட படிப்பைத் தேர்வு செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பயணங்களால் நன்மை அடைவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். உங்கள் கருத்துகளைப் பிறர் ஏற்பார்கள். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடி செல்வீர்கள். விவசாயிகள் போட்டிக்குத் தகுந்தவாறு செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்காணிப்புக்கு ஆளாவீர்கள். கலைத் துறையினர் சோம்பேறித்தனத்தை விரட்டவும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடக்கவும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்} அக்டோபர் 25.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். யோகா கற்பீர்கள். காரியங்கள் இழுபறியுடன் முடிவடையும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கை நிறைவேறும். வியாபாரிகள் மனவலிமையை கூட்டிக் கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விவசாயிகள் மகசூலை அதிகரிக்க முயற்சிப்பீர்கள்.

கலைத் துறையினர் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். பெண்களுக்கு வருமானம் பல வழிகளில் வந்து சேரும். மாணவர்கள் கடினமாக உழைத்து மதிப்பெண்களைக் கூட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 26, 27, 28.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிறையும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் நடப்பீர்கள். வியாபாரிகள் போட்டியாளர்களால் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளால் புகழ் உண்டாகும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் யோசித்து செயல்படவும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 29, 30.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:31 PM

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். உடனிருப்போருடன் பக்குவமாகப் பழகுவீர்கள். காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வெகுமதி கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நிதானத்துடன் செயல்படவும். கலைத் துறையினர் ஒப்பந்தங்களைத் தாமதத்துடன் நிறைவேற்றுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - அக்டோபர் 31.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.