பொதுப்பலன்கள் 
செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2025

தமிழ்ப் புத்தாண்டில் பொதுவாக நிகழக்கூடியவை பற்றி..

DIN

2025 விஸ்வாவசு வருடத்தின் பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 30ம் தேதி பின்னிரவு (விஸ்வாவஸு வருஷம் சித்திரை 01 முன்னிரவு) - 14.04.2025 - அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் - க்ருஷ்ண பக்ஷ பிரதமையும் - ஸ்வாதி நக்ஷத்ரமும் - வஜ்ர நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 2.38க்கு (உதயாதி நாழிகை: 50:56)க்கு மகர லக்னத்தில் ஸ்ரீவிஸ்வாவஸூ வருஷம் பிறக்கிறது.

பொது பலன்கள்

சகல வித ஜீவராசிகளுக்கு சுபிக்க்ஷம் ஏற்படும். 1-க்கும் 2-க்கும் உடைய சனிபகவான் ஆட்சி பலம் பெற்று இந்த விசுவாவசு வருடம் இராசி அதிபதியாக பதவி வகிக்கிறார். சூரியன் பகவான் இவ்வாண்டு ராஜாவாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதியாக வருவதால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைகள் ஏற்படும். இயற்கை வளம் பெருகும். மழை நன்றாக பொழியும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்க நேரும். இரும்பு எக்கு தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கும். உலகத்தில் உணவு பொருள்களின் உற்பத்தி அதிக அளவில் அதிகரிக்கும். உப்பு உற்பத்தி அதிகரிக்க நேரும். விமான போக்குவரத்தில் பல அதி நவீன வசதிகள் ஏற்படும். எரிவாயு உற்பத்தி அதிகரிக்க நேரும் உடனுக்குடன் விலை வாசியும் அதிகரிக்க நேரும். மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்க நேரும்.

இவ்வாண்டு நீல மேகம் கிழக்கு திக்கில் உற்பத்தி ஆவதால் வடமாநிலம் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். மரக்கால் (குறுணி) மழையும் இவ்வாண்டு ஆதாயம் 65, விரையம் 59, வருவதால் அதிகமான ஆதாயம் 06 வருவதால் பல நலத்திட்டங்களை மத்திய மாநில அரசு அறிவிக்க நேரும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.

வருடம் பிறக்கும் போது லக்கினத்தை குரு பார்ப்பது உகந்ததாகும். பல சுப நிகழ்வுகள் இந்த வருடம் நடக்கும். குடிநீர் தேவை அதிகரிக்க நேரும். அடிக்கடி மின்சாரம் தடைகள் ஏற்படும். உற்பத்தி ஆகும். மோட்டார் ரக பேட்டரி வாகனத்தில் உற்பத்தி அதிகரிக்கும், பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். பல புதிய ரக மோட்டார் ரக வாகனங்கள் அதிக அளவில் பல தகராறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அந்நிய நாடுகளின் முதலீடு அதிக அளவில் இந்தியாவிற்கு வர வாய்புள்ளது. மஞ்சள் விலை ஏறி இறங்கும். தங்கம் வெள்ளி விலை உச்சத்தை தொடும்.

மருந்து பொருள்களின் விலை அதிகரிக்கும். நிலக்கரி இரும்பு சுரங்கங்கள் பெட்ரோலியம் கிணறு போன்றவற்றில் விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உலக ஜெகத் ஜாதகத்திற்கு மகரம் லக்கினம் ஆகும். லக்கினத்திறகு அஷ்டமாதிபதியான சூரியன் பகவான் மேஷத்தில் நட்பு பலம் பெற்றும் லக்னத்தை செவ்வாய் இருப்பதால் இந்தியாவில் புதிய தொற்று கிருமி பரவ நேரும். இந்த ஆண்டு 08-க்குடைய அஷ்டமாதியான ராஜ கிரஹமாகிய சூரியன் பசுவான 4 பதவிகளை வகிப்பதாலும் தனது நட்பு வீடான மேஷத்தில் அமர்ந்து உச்சம் பெற்று 7-ஆம் பார்வையாக சுக்கிரன் வீட்டையும் 10-ஆம் பார்வையாக லக்னத்தையும் பார்ப்பதால் போலி பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழகத்தில் இருக்கும்.

நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட் கேஸ் வழக்குகள் உடனுக்குடன் முடிக்கு வரும். சந்திரனுக்கு சுக்கிரன் மறைந்திருப்பதால் பெண்களுக்கு அவமாரியாதை நடைபெறலாம். பாலியல் தொல்லைகள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளது. தீர்த்த யாத்திரை புனிதபயணம் செல்பவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்படும். சற்று ஜாக்கிரதையாக பிரயாணம் செய்வது நலம் தரும்.

பூச்சி-கருவண்டு போன்ற ஜீவராசிகள் அதிக அளவில் இனபெருக்கம் அடைய நேரும். சித்திரை மாதம் 01-ந்தேதி திங்கள் கிழமை வருவதால் தண்ணீர் பிரச்னை இருக்காது. இந்த விசுவாவசு ஆண்டு இரவில் பிறப்பதால் உலக அளவில் புதிய வைரஸ் நோய் தாக்குதல் வரலாம். ஐப்பசி மாதம் 01-ந்தேதி சனிக்கிழமை வருவதால் வெங்காயம் தக்காளி சிறுதானியம் வகைகளின் விலை உயரும்.

பூண்டு எலக்காய் தேங்காய் மாங்காய் புளி போன்றவை விளைச்சல் அதிகரிப்பதுடன் விலைஉயர்வும் இருக்கக்கூடும். சிறுபான்மையினர் வாழும் இடத்தில் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும். திருட்டு நில அபகரிப்பு பெண்களுக்கு எதிரான வழக்கு அதிகரிக்க நேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT