செய்திகள்

நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!

சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடும் காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

DIN

நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடும் காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முற்கால சோழர்களால் கட்டப்பட்ட பாடல் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரியநாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது‌. இங்கு சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனை போல கலங்கி நின்றபோது அசரீரியின் கூற்றுப்படி சூரிய தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி ஸ்ரீ நாகேஸ்வரரை வழிப்பட்டதால் தன் சாபம் நீங்கப்பெற்றார். அதுமுதல் ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை 11,12,13 ஆகிய மூன்று நாள்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் காட்சியே சூரிய பூஜையாகும்.

இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் விசுவாவசு ஆண்டு தமிழ் சித்திரை மாதம் 11ம் நாளான இன்று காலை சூரிய உதயத்தின் போது சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டது. ஸ்ரீ நாகேஸ்வர சுவாமிக்கும், ஸ்ரீ பெரியநாயகி, நடராஜ பெருமான் மற்றும் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ சூரிய பகவானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT