மகாகாளேஷ்வர் 
செய்திகள்

ரக்க்ஷாபந்தன்: மகாகாளேஷ்வருக்கு 1.25 லட்சம் லட்டு, ராக்கியுடன் சிறப்புச் சடங்கு!

மஹாகாளேஷ்வர் கோயிலில் ரக்ஷாபந்தனை முன்னிட்டு புனித ராக்கி, மகாபோகம் சிறப்புச் சடங்கள் செய்யப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

ரக்ஷா பந்தனை முன்னிட்டு உஜ்ஜையினி மஹாகாலேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்புச் சடங்குகள் செய்யப்பட்டது.

மஹாகாலேஷ்வர் கோயிலில் எந்தவொரு பண்டிகையையும் முதன்மையாகக் கொண்டாடும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றது. அதன்படி சகோர, சகோதரிகளுக்கு இடையிலான பாசத்தைக் குறிக்கும் மங்களகரமான நிகழ்வான ரக்ஷாபந்தன் விழா சனிக்கிழமை அதிகாலை மிகுந்த ஆடம்பரமாக நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை 3.30 முதல் 5.30 வரை பிரம்ம முகூர்த்தத்தின்போது மஹாகாலேஷ்வரருக்கு புனித ராக்கி கட்டி, 1.25 லட்சம் லட்டுகளைக் கொண்ட மகாபோகம் வழங்கும் சிறப்புச் சடங்குகள் நடைபெற்றது.

பஸ்ம ஆரத்தி மகாகாலேஷ்வர் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளில் ஒன்றாகும், மத நம்பிக்கைகளின்படி, பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பக்தரின் விருப்பங்கள் நிறைவேறுவதாக ஐதீகம்.

சிற்பு சடங்குகளுக்காக இன்று அதிகாலை பால், தயிர், நெய், சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் மகாகாலேஷ்வருக்கு கஞ்சா மற்றும் சந்தனத்தால் அலங்கரிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர் கூறுகையில்,

புனித நாளான இன்று முதல் ராக்கி பாபா மகாகாலேஷ்வருக்கு கட்டப்படுகிறது. அனைத்து விஷேசங்களும் இந்த கோயிலில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பைக் கொண்டாடும் திருவிழாவும் இங்குக் கொண்டாடப்பட்டது. அனைத்து பக்தர்களும் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற பாபா மகாகாலேஷ்வரிடன் பிரார்த்தனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவர் மனைவியுடன் மகாகாளேஷ்வர் கோயிலில் ருத்ராபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். 

Along with this, the occasion was observed with a special ritual of tying a sacred Rakhi to Lord Mahakal and offering a Mahabhog of 1.25 lakh laddus during the Bhasma Aarti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

5% வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ் வெற்றி

SCROLL FOR NEXT