மார்கழி மாதம் என்றாலே, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் பெருமாள் கோயில்களில் களைகட்டும். ஆனால், 108 வைணவ தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுந்தவல்லி சமேத ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறுவதில்லை.
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, காஞ்சிபுரம் ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயில், பல்லவர் கால கட்டுமானத்துடன் மிகக் கம்பீரமாகத் திகழ்கிறது.
பரமேஸ்வர விண்ணகரம் என்ற பெயர் கொண்ட இக்கோயில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்கோயிலில் மூலவர் கருவறைத் தூண்கள் மற்றும் பிரகாரத் தூண்கள் யாவும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கோயிலில் மற்றொரு சிறப்பாக திருக்கோயிலிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களும் அவற்றின் தூண் சிற்பங்களும் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றன. சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் 18 பல்லவ மாமன்னர்கள் பட்டாபிஷேகக் காட்சிகள் மிகவும் அற்புதம்.
கோயில் மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்கவாசல் உற்வம் கிடையாது. இப்பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.