செய்திகள்

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு- ஜன.14-இல் மகரஜோதி

மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்ட சபரிமலை கோயில்...

இணையதளச் செய்திப் பிரிவு

வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், ஜன.14-இல் நடைபெறவுள்ளது.

பக்தா்களின் சரண கோஷங்கள் முழங்க, தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி இ.டி.பிரசாத் கருவறை கதவைத் திறந்து மாலை நேர பூஜைகளை மேற்கொண்டாா்.

பின்னா், சுவாமி ஐயப்பனின் திருமேனி விபூதியுடன் மாளிகைப்புறம் மாதா கோயிலின் சாவியைப் பெற்றுக் கொண்ட மேல்சாந்தி மனு நம்பூதிரி, விநாயகா் மற்றும் நாகராஜா சந்நிதிகளில் வழிபட்ட பின் அக்கோயிலின் நடையைத் திறந்தாா்.

சந்நிதானத்தில் உள்ள ஆழிக்குண்டம் ஏற்றப்பட்டதும் பதினெட்டாம் படி வழியாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜன.14-இல் நடைபெறவுள்ளது. அப்போது, பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துவரப்படும் புனிதமான திருவாபரணங்கள் சுவாமிக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மகர பூஜை காலங்களில் ஜன.19 இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மறுநாள் பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி தரிசித்த பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.

Sabarimala temple opened for the annual makaravilakku festival on Tuesday evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரும் போராட்டம்: நள்ளிரவில் பெண் தூய்மைப் பணியாளர்கள் கைது!

2026 பொங்கலை சமூகநீதி கொண்டாட்டமாக்க முதல்வர் அறிவுறுத்தல்!

ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கடன் பிரச்னையைத் தீர்க்கும் வேணுகோபாலன்!

தடை நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT