முகப்பு
செய்திகள்

கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

கோடை விடுமுறை காலமான மே மாதம் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:31 PM
திருப்பதி கோயில்
பகிர்:

சென்னை; திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 23.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 55 ஆயிரம் அதிகம் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறைக் காலம் என்பதால், ஏராளமானோர், திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெரும்பாலும், இந்த மே மாதத்தில், திருப்பதி திருமலை கோயிலில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. முதல் வாரத்தில்தான் போர் பதற்றம் காரணமாக கூட்டம் குறைந்ததே தவிர இரண்டாவது வாரம் முழுக்க கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, மே மாத இறுதியில் நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →