செய்திகள்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு!

விமர்சையாக நடைபெற்றது ஸ்ரீ மகா மாரியம்மன் குடமுழுக்கு..

DIN

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.‌ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார கிராமங்களின் குல தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்றன.‌ இக்கோயில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு வர்ண வேலைபாடுகளுடன் திருப்பணி முடிவடைந்து. அதனை தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து அங்குரார்ப்பனம், ரக்ஷா பந்தனம், நவகிரக பூஜை பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன.

தொடர்ந்து இன்று நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி.. பராசக்தி என பக்தி கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து கோயிலின் மூலவரான மகா மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிவராமபுரம் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருவலஞ்சுழி கோபாலகிருஷ்ணன் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

SCROLL FOR NEXT