தஞ்சாவூரில் 90வது ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா இன்று (ஜூன் 16) நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் தொடர்ந்து 90-ஆம் ஆண்டாக இந்த விழா இன்று தொடங்கிய நிலையில் கருட சேவை வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து 24 பெருமாள் கருட வாகனத்தில் எழுந்துருளி வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வந்தன.
ஒரே இடத்தில் எழுந்தருளிய 24 கருட சேவையைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் 24 பெருமாள் கோயில்களுக்கு நேரடியாகச் சென்று தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.