மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!
மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு மாசி பெருவிழா பிப்.26 கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா கடந்த வாரம் நடைபெற்றது.
மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Advertisement
Advertisement
தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.