புழல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்!
சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி தெருவில் உள்ள ஸ்ரீசங்கர குருகுலத்தில்,
ராதா மாதவ விவாகம்
சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி தெருவில் உள்ள ஸ்ரீசங்கர குருகுலத்தில், ராதா மாதவ விவாகம் மார்ச் 14 முதல் 16}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் 14 மாலை 6.30 மணி} நாமசங்கீர்த்தனம். மார்ச் 15 காலை 8.45} கீதகோவிந்தம், மகாகாவியம்; மாலை 4} பஞ்சபதி, தியானம், பூஜைகள்; இரவு 7} திவ்யநாம சங்கீர்த்தனம், டோலோற்சவம்.
மார்ச் 16 காலை 8} உஞ்சவவர்த்தி, ஊஞ்சல், மாலை மாற்றுதல்; காலை 9} ராதா மாதவ கல்யாணம்; மாலை 5} வில்லிசை நிகழ்ச்சி; இரவு6.30} பக்த சரித்திரம், ஆஞ்சனேயர் உற்சவம்.
பூச்சொரிதல் விழா
சென்னை புழல் காவாங்கரை (கிழக்கு) தனலட்சுமி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16}ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச் 9}இல் தொடங்கியது. ஏப்ரல் 6}ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதன்படி, மார்ச் 16, 23, 30, ஏப். 6 ஆகிய தேதிகளில் விழா நடைபெறும். அந்த நாள்களில் காலை 11.30 மணியளவில் மகா தீபாராதனை நடைபெறும். மேற்கண்ட நாள்களில் அம்மன் அக்னிரூபமாக இருப்பதால், அம்மன் மனம் குளிர்ந்திருக்க மஞ்சள் நீரை பக்தர்கள் கொண்டு வந்து, கோயிலைச் சுற்றி ஊற்றி அம்மன் அருள் பெறலாம். பக்தர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து பூக்களைக் கொண்டு வந்து, மூலவருக்கு தாங்களே மலர் அபிஷேகம் செய்யலாம்.
விழா நாள்களில் அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருப்பதால், உப்பில்லா பிரசாதங்கள் மட்டுமே நிவேதனத்துக்கு ஏற்றுகொள்ளப்படும் என்பதால், இளநீர், கரும்பு, பானகம், நீர்மோர், வெள்ளரி பிஞ்சு, பனை வெல்ல பானகம், துள்ளு மாவு ஆகியன மட்டும் பிரசாதமாகப் படைக்கப்படுகின்றன.
களரி விழா
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்புவனம் அருகே மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மேலவீட்டு பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட சங்கராயி அம்மன் கோயிலில் மாபெரும் இரண்டாம் ஆண்டு களரி விழா மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.