தஞ்சை ராஜா வீதியில் 
செய்திகள்

தஞ்சையில் ஆருத்ரா! ராஜ வீதியில் 10க்கும் மேற்பட்ட நடராஜர் தரிசனம்!

தஞ்சையில் களைகட்டியது ஆருத்ரா, 10க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து ராஜ வீதிகளில் நடராஜர் பெருமான் உலா வந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பத்துக்கு மேற்பட்ட சிவாலயங்களில் இருந்து எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்த நடராஜர் பெருமானை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வழிபட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் உள்ள பெரிய கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன.

இந்த கோயில்களில் உள்ள நடராஜர் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட நடராஜர் பெருமான் இராஜ வீதிகளில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ராஜவீதிகளில் பத்துக்கு மேற்பட்ட நடராஜர்கள் எழுந்தருளியதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய கோயில்களில் குடிகொண்டிருக்கும் நடராஜர்களை விதவிதமான அலங்காரத்துடன் காண கண் கோடி வேண்டும் என தரிசனத்தை நேரில் கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

ஓபிஎஸ், தினகரன் தவெக கூட்டணியில் இணைவார்கள்: செங்கோட்டையன்

வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்!

அமெரிக்காவைப் போல பாகிஸ்தான் பயங்கரவாதியை தைரியமாக கைது செய்ய பிரதமருக்கு ஒவைசி அழைப்பு

திமுக மூத்த தலைவர் எல். கணேசன் காலமானார்

SCROLL FOR NEXT