மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து மாலையிட்டு அவைகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் உணவாக வழங்கப்பட்டன. தொடர்ந்து பெரு நந்திக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் திரவிய பொடி கரும்புச்சாறு இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், இரண்டு டன் இனிப்புகள், பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.