ஆராய்ச்சிமணி

கோயில் குளத்தால் சுகாதார சீர்கேடு!

DIN

ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியில் ஆதி கைலாசநாதர் கோயில், ஓம்சக்தி கோயில், செல்லாத்தம்மன் கோயில் ஆகியவற்றின் அருகே ஒரு குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் ஆகாயத் தாமரை மற்றும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மேலும், இங்கு குப்பையுடன் கழிவுநீர் கலக்கிறது. இந்தக் குளத்தைத் தூர் வாரும் பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது பாதியில் நிற்கிறது. இந்த 3 கோயில்களுக்கும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். குளம் அசுத்தமாகக் காணப்படுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் குளத்தை விரைவாகத் தூர் வாரி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT