ஆராய்ச்சிமணி

சிதிலமடைந்த நிலையில் சிறுவர் பூங்கா!

DIN

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மக்களின் வசதிக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வார்தா புயல் வீசியபோது பூங்காவில் இருந்த மரங்கள் ஆங்காங்கே சாய்ந்த நிலையில் உள்ளன. அதன் வேர்களைக் கூட இதுவரை நகராட்சி அப்புறப்படுத்தவில்லை. மேலும், தற்போது சிறுவர் பூங்காவில் பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் மது அருந்துகின்றனர். அங்கேயே மது பாட்டில்களையும் பிளாஸ்டிக் கவர்களையும் போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும், பூங்காவில் புதர்கள் மண்டி கிடப்பதால் பொதுமக்களால் நடமாட முடியாமல் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ.பழனி, ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT