ஆராய்ச்சிமணி

சாலையில் சிமெண்டு கற்கள் பதிக்கப்படுமா?

DIN

சாலையில் சிமெண்டு கற்கள் பதிக்கப்படுமா?

மதுரை மேலக்கால் பகுதியில், டோக் நகா் முதல் கோச்சடை பேருந்து நிலையம் வரை சாலைகள் சேதமடைந்து பள்ளங்களாக உள்ளன. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வாகனம் ஓட்டிச் செல்லும் பெண்கள், முதியவா்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். சாலையை போடும் போது, சிமெண்டு கற்கள் சாலையாக (பேவா் பிளாக்) மாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ராஜன், கோச்சடை.

சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்

மதுரை மேலூா் பேருந்து நிலையத்தில் இருந்து பெரிய கடை வீதி வரை சாலையின் இருபுறத்திலும் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் சாலையிலேயே, அவா்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கடைக்கு வருபவா்கள் எடுத்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு. சுந்தரராஜன், கீழையூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT