தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 796

ஹரி கிருஷ்ணன்

நற்றாய் இரங்கல் துறையில் பெருமான் மீது காதல் கொண்ட மகளைக் காக்குமாறு தாய் வேண்டுகின்ற பாவனையில் அமைந்தது இப்பாடல்.

அடிக்கு ஒற்றொழிது 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

      தனனத் தனனத்                 தனதான

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்

         துகளிற் புதையத்                 தனமீதே

      புரளப் புரளக் கறுவித் தறுகட்

         பொருவிற் சுறவக் கொடி         வேள்தோள்       

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்

         செயலற் றனள்கற்               பழியாதே

      செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்

         தெரிவைக் குணர்வைத்           தரவேணும்

சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்

         சுரருக் குரிமைப்                  புரிவோனே 

      சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்

         சுருதிப் பொருளைப்              பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்

         தனிநெட் டயிலைத்              தொடும்வீரா 

      தவளப் பணிலத் தரளப் பழனத்

         தணிகைக் குமரப்                பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT