இந்த நாளில்...

13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று!

DIN

தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ல் அளித்த தீர்ப்பில், உப்ஹார் திரையரங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது.

அபராதத்தை செலுத்த தவறி னால் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் அபராதத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர்.

அதில் கோபால் அன்சாலுக்கு (66) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வயது முதுமை காரணமாக சுஷில் அன்சால் (77) விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT