கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 25

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் - அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும். உரைசால் பத்தினியை

தினமணி

செம்மொழிக் காலக்கோடு

* 1901 - மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழ் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.

* 1918 - மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.

* 1918 - சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 1919 - கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.

* 1966 - உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.

* 2004 - நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

பரிதிமாற்கலைஞரின் சொல்லாக்கங்கள்

* Aesthetic - இயற்கை வனப்பு

* Biology   - உயிர்நூல்

* Classical Language - உயர்தனிச் செம்மொழி

* Green Rooms - பாசறை

* Instinct - இயற்கை அறிவு

* Order of Nature - இயற்கை ஒழுங்கு

* Snacks - சிற்றுரை

இலக்கணம்: எழுத்து

* உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துக்களை முதலெழுத்துக்கள் என்பர்.

* ஐ - இரண்டு மாத்திரை

ஐகாரக்குறுக்கம்
ஐ என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பார்த்தால் அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும் ஆனைல் இவ்வெழுத்தைச் (ஐ) சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வருமாறு எழுதி ஒலித்துப் பார்க்கும்போது ஆஃது, ஒலி குறைந்து ஒலிப்பதனை உணர்வீர்.

சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகராம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.

ஔகாரக்குறுக்கம்
ஔ என்னும் நெடில் எழுத்தும், "ஐ" என்னும் நெட்டெழுத்தைப்போலவே தனியாக ஒலிக்கும்போது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதில்லை. ஆனால் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஔகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும். அதுவே ஔகாரக்குறுக்கம் எனப்படும்.

சொல்லுக்கும் இடையிலும் இறுதியிலும் ஔகாரம் வாராது.

மகரக்குறுக்கம்
"ம்" என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். அதாவது, "ம்" என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம். ("ஃ" என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.) நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆய்தமாகத் திரியும். இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். இதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

சிலப்பதிகாரம்: மதுரைக் காண்டம் (வழக்குரை காதை)

* இளங்கோவடிகள் சேரமரபினர் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தாய் நற்சோணை, இவர்தம் தமையன் சேரன் செங்குட்டுவன்.

* சிலப்பதிகாரம் இசை நாடகமாக அமைந்துள்ளது.

* சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் - அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

* பாண்டிய மன்னனின் துறைமுகம் - கொற்கை

* காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன்

* காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி

* கோவலன், ஆடலரசி மாதிவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான்.

* மாதவி, இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலைப் பாடினாள்.

* பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், மாதவியை விட்டு பிரிந்தான்.

* வாணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

* அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.

* மதுரை நகர்ப்புறத்தில் மாதிரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார்.

* கோவலன் சிலம்பு விற்றுவர மதுரைநகரக் கடைவீதிக்குச் சென்றான்.

* புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன் சிபி

சொற்பொருள்:

* கொற்கை - பாண்டிய நாட்டின் துறைமுகம்

* தென்னம் பொருப்பு - தென் பகுதியில் உள்ள பொதிகைமலை

* பசுந்துணி - பசிய துண்டம்

* தடக்கை - நீண்ட கைகள்

* தாருகன் - அரக்கன்

* பேர் உரம் கிழித்த பெண் - அகன்ற மாப்ரினைப் பிளந்த துர்க்கை

* செற்றம் - கறுவு

* செயிர்த்தனள் - சினமுற்றவள்

* பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு

* கடைமணி - அரண்மனை வாயில்மணி

* ஆழி - தேர்ச்சக்கரம்

* ஏசா - பழியில்லா

* கொற்றம் - அரச நீதி

* நற்றிரம் - அறநெறி

* வாய்முதல் - (வாயின் முதலாகிய) உதடு

* படரா - செல்லாத

இலக்கணக்குறிப்பு:

* மடக்கொடி - அன்மொழித்தொகை

* படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணி, தேரா மன்னா, ஏசாச் சிறப்பின் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்

* அவ்வூர் - சேய்மைச்சுட்டு

* வாழ்தல் - தொழிற்பெயர்

* என்கால், என்பெயர், நின்னகர், என்பதி - ஆறாம் வேற்றுமைத்தொகைகள்

* தாழ்ந்த, தளர்ந்த - பெயரெச்சங்கள்

* வருக, தருக, கெடுக - வியங்கோள் விணைமுற்று

பிரித்தறிதல்:

* எள்ளறு - எள் + அறு

* புள்ளுறு - புள் + உறு

* அரும்பெறல் - அருமை + பெறல்

* பெரும்பெயர் - பெருமை + பெயர்

* அவ்வூர் - அ + ஊர்

* பெருங்குடி - பெருமை + குடி

* பெண்ணங்கு - பெண் + அணங்கு

* நற்றிறம் - நன்மை + திறம்

* காற்சிலம்பு - கால் + சிலம்பு

* செங்கோல் - செம்மை + கோல்

ஆசிரியர் குறிப்பு:

* இளங்கோவடிகள் சேரமரபினர்

* இளங்கோவடிகளின் தந்தை - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் - நற்சோணை.

* தமையன் - சேரன் செங்குட்டுவன்.

* இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும்பொருட்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.

* இளங்கோவடிகள் அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி

* இவர் காலம்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

* இளங்கோவடிகளின் சிறப்புணர்ந்த பாரதியார், "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" எனப் புகழ்கிறார்.

நூற்குறிப்பு:

* சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.

* சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.

* சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம் புகார்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெருங் காண்டங்களையும்முப்பது காதைகளையும் உடையது.

* புகார்காண்டம் பத்துக் காதைகளையும்

* மதுரைக்காண்டம் பதிமூன்று காதைகளையும்

* வஞ்சிக்காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது.

* இது உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.

* முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றிப் புகழ்வார்.

* "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு" எனப் பாரதியாரால் போற்றப்பட்டது இக்காப்பியம்.

* மதுரைக்காண்டத்தின் பத்தாவது காதை வழக்குரை காதை.

* காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்டது இரட்டைக்காப்பியமான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் வழங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குடி, கொத்தமங்கலம் அம்மன் கோயில்களில் பாளையெடுப்பு திருவிழா

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

அரசுப் பேருந்து மோதி காவலா் உயிரிழப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT