கவிதைமணி

மழை நீர் போல: இளந்தென்றல் திரவியம்

கவிதைமணி

வானத்தின் தலைமேல் மேகப்பையாய்..
பேதம் பார்க்காமல் விழும் நீள் துளியாய்
குடைகளில் வழுக்கும் நீர்த்தாரையாய்
பள்ளம் பார்த்துப்  பாயும் குறு ஊற்றாய்
கற்களை கூழாங்கற்களாய் உருட்டும் ஓடையாய்
பிரவாகமெடுத்து பாயும் படர் நதியாய்
வனங்களின் வேர்களுக்கு பாலூட்டும் திரவ காம்பாய்
பூவின் நறுமணத்தில் குழைந்த மதுவாய்
உயிர்களின் இரப்பையை ஈரமாக்கும் புத்துயிராய்
புழுதி மண்ணில் வாசம் கண்டுபிடிக்கும் முதல் துளியாய்
பிரபஞ்சத்தின் ஒற்றைக் கடலாய் வாழும்
மழை நீர் போல் வாழ்வோம்..
தனித்துவமாய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT