கவிதைமணி

மழை நீர் போல: கவிஞர் ராம்க்ருஷ்

கவிதைமணி

மழை நீர் மண்ணின் தாகம் தீர்க்கும் மாமருந்து
இழையிழையாக அன்பை மண்ணுக்குள் இறக்கும்
தழை செடி கொடிகள் மகிழ்ச்சியில் பளபளக்கும்
உழைக்கும் உழவரின் உளம் நனைக்கும் விருந்து

மனிதநேயம் மிளிர மனிதரும் மழை நீர் போலே
புனித செயல்கள் பல செய்து வள்ளலாகணும்
இனிய சொற்களால் அன்பு மழை பொழியணும்
கனிவு தரும் உதவிகள் பல செய்து மிளிரணும்

பள்ளங்களில் பாய்ந்தோடி குளங்களாகிக் குளிரணும்
உள்ளங்களில் அன்பு விதைத்து வளரச் செய்யணும்
கள்ளமில்லா மனதுடன் யாவரையும் சரிசமமாக
குள்ளமில்லா குணத்துடன் குறையின்றி நடத்தணும்

நதிகளாகி நன்மைபல புரியும் நாயகனாய்த் திகழணும்
சுதிமாறா சுந்தர ஓட்டம் ஓடி அழகாக மிளிரணும்
துதிக்கும் வண்ணம் வற்றாமல் வளமாக வாழணும்
நிதி கிட்டும் வண்ணம் நிம்மதியாய் நிலையாகணும்

பாயும் மண்ணின் தன்மையில் தன்னை மாற்றணும்
காயும் கனியும் செழித்திட கடும் உழைப்பிலாகணும்
பாயும் புலியாக பாய்ந்து பாய்ந்து பணியாற்றணும்
தேயும் நிலவாக தேய்ந்து வளர்ந்து செழிப்பாகணும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT