கவிதைமணி

இன்றைய தாலாட்டு: சா. கா. பாரதி ராஜா

கவிதைமணி

மொழிகளில்லை
விழிகளால் ஒரு தாலாட்டு!

அவளின் விழித்தொட்டிலில்
தாலாட்டுகிறாள் என்னை...
உறக்கமில்லை
உறவின் தாலாட்டு
என்னவளின் விழிப்பாட்டு!

அவளின் இரு விழித்தொட்டிலில்
ஆடும் ஒற்றை மன்னன்
நான்!

அவளின் விழிக்கருவில்
விரும்பி
சிறைசென்ற
கைதி நான்!

பிணை வாங்க விழையா
அவளின்
இணையாய் தொடரும்
அவளது அன்பின்
ஆயுள் கைதி நான்!

என்னை
விடுவித்து விட்டு 
தேடும் பொழுது
விடுகிறாள் கண்ணீரை!

வயிற்றில்
என்னை சுமக்கவில்லை
விழியிலும் நெஞ்சிலும்
சுமக்கிறாள்!
என் வாழ்வின் சுமைதாங்கி!

மோகத்தில்
முத்தமொழியில்
அவள் பாடும் தாலாட்டில்
மொத்தமாய் என்னை
புதைத்து விடுவாள்
அவளின் முத்தச் சூழலில்!

தோள்களில்
அவள் சாய்கையில்
அவளின் விழி இமைகள்
இதயத்தை தாலாட்டும்!

இது
வாழ்வின்
இரண்டாம் தாலாட்டு!
மணமான காளையின்
இன்றைய காதல் தாலாட்டு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT