கவிதைமணி

இன்றைய தாலாட்டு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி

தூளியே தொலைந்த காலத்தில்
கொஞ்சம் தள்ளியே நிற்கிறது 
இன்றைய தாலாட்டு!

அம்மாக்கள் அரவணைப்பில்
பாட்டி தாத்தா பாசத்தில் 
பயணித்த தாலாட்டு
இன்று தேய்பிறையாய்
தேய்ந்து கிடக்கிறது!

நிலா முற்றங்களில் நீண்டு ஒலித்த
தாலாட்டுப் பாடல்கள்
அப்பார்ட்மெண்ட் அடுக்ககங்களில்
அமிழ்ந்து கிடக்கிறது!

சோறுட்டும் போதும்  தாலாட்டும் போதும்
இசையூட்டிய அம்மாக்கள்
பசை தேடி பயணிக்கையில் 
திசை தெரியாமல் திணறி
மூச்சிழந்து முடங்கி கிடக்கின்றன!

அலைபேசிகளும் தொலைக்காட்சிகளும்
தோழனாக உலாவும்
தோற்றப்பிழை காலத்தில் பிள்ளைகளுக்கு
கிடைப்பதில்லை
பெற்றவளின் தாலாட்டு!

திரையிசையும் தெருவசையுமே
இன்றைய பிள்ளைகளுக்கு
என்றும் தாலாட்டு!

வசதிகள் எல்லாம் வழக்கமாக
வழுவிப் போய் வெறும்
தழுவலோடு நின்றுவிட்டது
இன்றைய தாலாட்டு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

பிரதமர் போட்டியிலிருந்து மோடி விலக வேண்டும்: அசோக் கெலாட்

சிவக்குமார் கோட்டையை தகர்த்த தேவ கெளடா மருமகன்!

ரே பரேலி: சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

உத்தரகண்டில் 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை!

SCROLL FOR NEXT