கவிதைமணி

 வீர  மங்கை: மா.உலகநாதன்

கவிதைமணி

அறுபத்தைந்து முறை அடைக்கப்பட்டாலும்
அன்றாடம் அச்சுறுத்தல்,அவமானப் பேச்சு
ஆயிரம் தான் வந்தாலும்
மதுவுக்கு எதிராக அசராமல் போராடும்
மாத் தமிழச்சி நந்தினியைத் தான்
வீரமங்கை என்பேன் நான்!

நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பது
வள்ளுவம்; இந்  நஞ்சுண்டு
நாளும்    நலியும்   நாட்டோர்
வாழ்வை மீட்டெடுக்கும்  பணிசெய்யும்
இவரல்லால்,இன்னொருவர்
வீரமங்கை ஆவாரோ?

இளமையைப் பணயம் வைத்து ,
மது ஒழியாதா,மணாளன்
திருந்துவானா?என்று ஏங்கும்
குடும்பங்களுக்கு ஏற்றமிகு
நம்பிக்கையே நந்தினி தான்!

இவரைப் பெற்றவர்கள் எந் நோற்றான்!
என்று எதிர்காலம் பேசும்;
இனி நந்தினி தான்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT