கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

மண்ணில் தாவி குதித்தோடும் 
மங்கையென வெட்கம் கொண்டே 
மயங்கி ஓடிவரும் ஆறே  !

இருக்க நிலையில்லா நீரிது
நிலத்தில் ஓரிடம் நில்லாது 
காடு மேடு அலையும் ஆறே  !

நீ சொல்லித்தரும் பாடம் 
நில்லாத தொடர் ஓட்டமதுவே ! 
இயங்கிக்கொண்டே இருக்கும் ஆறே  !

கடலில் கலக்காது அணையில் தேங்கி 
மக்களுக்கு உணவாகிறாய் - நன்றிகள் !
மழை உன் தாய் என்றால் 
சுற்றுப்புற மாசுபாடுகள் - 
மனித செயல்பாடுகள் காயங்களாய்  !

நீரின் பாதையில் கட்டிடங்கள் !
அதனாலே வெள்ளமாகிறாய்!
உன் தாயின் வருகைக்குக் காத்திருக்கும் 
கோடி உள்ளங்கள்- அழைத்து வா ஆறே  !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT