கவிதைமணி

அந்நாளே திருநாள்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

கவிதைமணி

நாட்டின் ஆட்சியும் காட்சியும்
மாறுமோ அந்நாளே திருநாள்.

சமுதாயச் சீர்கேடுகள்
கொட்டிக் கிடக்கின்றன.
அவைக்கு கேடு வரும்
அந்நாளே திருநாள்

பண்பாட்டை மாற்றும்
பல நிகழ்வை
கண் கெட வைக்கும்
அந்நாளே திருநாள்

உதவும் கரங்கள்
உயர்ந்த உள்ளங்கள்
வளர்வதைத் தடுக்கும்
தான்தோற்றிகள் மறையும்
அந்நாளே திருநாள்

நீருக்கும் பாருக்கும்
அலையும் அரசுகள்
பணத்தை தேடும்
பிணந்திண்ணிகள்
மாறி மகத்துவம் காணும்
அந்நாளே திருநாள்

பக்கத்து வீட்டுக்காரன்
நம் குடும்பச் சண்டையில்
குளிர்காயமல் தெளிவாக்கினால்
அந்நாளே திருநாள்

பாரதம் அழியாமல்
பரதம் ஆட மக்கள் பண்பாடோடு
வாழ்வது
அந்நாளே திருநாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT