கவிதைமணி

அந்நாளே திருநாள்: ரெத்தின.ஆத்மநாதன்

கவிதைமணி
உலகெங்கும் அமைதி பூத்து உறவெல்லாம் அன்பில் திளைத்துநினைவெல்லாம் நிம்மதி மட்டுமே நித்தமும் புதிதாய்த் தோன்றிகனவெல்லாம் களிப்பேயாகி காண்பதனைத்தும் நிறைவேயாகி​உயர்வெல்லாம் உண்மையாகும் அந்த ஒருநாளே திருநாளாகும்!எலும்புந் தோலுமாய் எக்குழந்தையும் எங்கேயும் இல்லாத சூழலை உருவாக்கிச் சுகந்தனையே நிரந்தர நிலையாக்கிசிறார்கள் வாழ்விலென்றும் சிக்கலில்லா இன்பம் பெருக்கிஊரார்கள் உணர்ந்து வாழும் அந்த ஒருநாளே திருநாளாகும்!பாகிஸ்தான் ஶ்ரீலங்கா பரந்த பாரதம் பக்கத்து நாடு சீனாஒன்றாய் இணைந்து ஒட்டு மொத்தமாய் தீவிரவாதத்தை ஒழித்து    விட்டாலிங்கு    ஒற்றுமை     மிகுந்து   ஓங்கி நல்லெண்ணம் சிறந்து ஓங்கும் நந்நாளே திருநாளாகும்!அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளும்ஒன்றுக்குள் ஒன்றாகி என்றும் உயர்வினையே கருப் பொருளாக்கிஒருவருக் கொருவர் என்றே உயர்ந்த நல் லட்சியங் கொண்டு அன்பு கொண்டே இணைந்திடுகின்ற அந்நாளே திருநாளாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT