கவிதைமணி

நினைவுப் பெட்டகம் - 2017: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் 
கடந்து சென்றும் பாடம் சொல்லும் 
கவனித்து பயணித்தால் வெற்றி நிச்சயம் 
கவனம் தவறினால் அனுபவம் நிச்சயம் 
வெற்றியை எளிதில் கடந்துவிடு
தோல்வியை மனதில் பதியமிடு.

உங்களால் தான் முடியுமென்பார்
எங்கள் ஆதரவு உங்களுக்கென்பார்
அடிக்கும் காற்று மாறி வீசினால் 
நீங்கள் எல்லாம் சுமையென்பார்
பச்சோந்தியின் குணம் நிறைந்த 
அரசியல்வாதிகளை மறக்க முடியுமா? 

கடவுளை மற மனிதனை நினையென
பெரியார் சொன்னார் மனிதம் போற்றி 
மகனைக் கொன்றான் மனுநீதியும்
மாட்டின் துன்பம் போக்கவே
மாட்டுக்காக மனிதனைக் கொன்ற
மத வெறியை மறக்க முடியுமா?

காமராஜரும் கக்கனும் வென்ற 
அரசியல் நேர்மை விளைந்த மண்ணில் 
ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் தான்
வெல்ல முடியும் என்று சொன்ன
2017 ஐ மறக்கத்தான் முடியுமோ?
மறக்க வைப்பாயா 2018ஆம் ஆண்டே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT