கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: மாரிசுப்பிரமணியன்

கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்
நான் நானாகயில்லை, 
உன்னை பார்த்த பின்பு
என்னை மறந்ததால் வந்த வம்பு, 
இதனை நீயும் நம்பு
நீ!  அனுதினம் வலம் வரும் 
தெருமுனையே, 
என் பணிமனையானதே, 

உன் விழிகள் இரண்டும், 
யுத்தம் செய்யும் கண்களாக மாறியதால்,
என் நெஞ்சைச் சுற்றி,
காதல் தீ பற்றியதே! 
நின்பால் என் அன்பு முற்றியதால்,

என் கால்கள் ஓட்டம் 
முற்றாமல் நிற்கிறதே, 
உனது யுத்தம் செய்யும் கண்கள் முன்  
தோற்கிறேன் இருந்தாலும் ஜெயிக்கிறேன் 
ஒருவித சுகத்தில் இலயிக்கிறேன் 

என்னையே உன் வசம்தாரை வார்க்கிறேன். 
யுத்தம் செய்யும் உன் கண்கள் எனக்கே 
என்றாகும் வரை, எனக்கில்லை உறக்கங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT