கிச்சன் கார்னர்

பூண்டு ரைஸ்

தவநிதி

தேவையானவை :

சாதம்  - 2 கிண்ணம்

பூண்டு - 10 - 15 பல்

வர மிளகாய் - 2

தனியா - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு -  1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 10

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இலை

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில் எண்ணெய்  விட்டு, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டு பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெய்யில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும். கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT