சைவ வகைகள்

பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ்

தவநிதி

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பேபி கார்ன் - அரைக் கிண்ணம் (நீளமாக வெட்டியது)

கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கிண்ணம் ( பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் - முக்கால் கிண்ணம் (நறுக்கியது)

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெள்ளை வினிகர் - அரை தேக்கரண்டி

சோயா சாஸ் - அரை தேக்கரண்டி

ஸ்பிரிங் ஆனியன்( வெங்காயத் தாள்) - சிறிது

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - அரைதேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் நூடுல்ûஸப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியனைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனைப் போக வதக்கவும், பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ûஸ சேர்த்து மீதமுள்ள எண்ணெய்யைச் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு புரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT