சைவ வகைகள்

பூண்டு துவட்டல்

ஆர்.கலாதேவி சாமியப்பன்

தேவையானவை:
பூண்டு - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தனியா - கால் கிண்ணம்
சீரகம் - அரை தேக்கரண்டி
ஒமம் - அரை தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தேங்காய் - முக்கால் கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் ( அ)
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயத்தை பாதிப்பாதியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், மேலே சொன்ன மற்ற எல்லா பொருள்களையும் எண்ணெய்விட்டு நன்றாக மணம் வரும்வரை வறுத்து எடுத்து சூடு ஆறியபின்  மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

அத்துடன்,  தேங்காயை தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டை அரை வதக்கலாக வதக்கி, பிறகு,  புளித் தண்ணீர், மஞ்சள், உப்பு சேர்த்து பின்னர், பொடித்த மசாலா கலவையைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  கொதிக்கவிடவும்.

லேசாக கொதி வந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகச் சுண்ட விடவும். பிறகு நல்லெண்ணெய்ச் சேர்த்து கலக்கவும். சுவையான  பூண்டு, மிளகுத் துவட்டல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT