சைவ வகைகள்

சத்தான உளுந்தங்களி

மரகத மீனாட்சி

தேவையான பொருள்கள்

கருப்பு முழு உளுந்து- 1 கிலோ(உளுந்தின் முழு சத்தும் கிடைக்க வேண்டுமென்றால் தோலுடன் சாப்பிட வேண்டும். பெண்களுக்கு மிக நல்லது. ஆண்களுக்கும் நல்லது.)
உளுந்தைக் கழுவி காய வைக்கவும். (நிழலில் என்றால் இரண்டு நாளாகும். வெயிலில் ஒரு நாளில் காய்ந்துவிடும்). பின்னர் உளுந்தை வாணலியில் வாசம் வரும் வரை வறுக்கவும். மாவு அரவை ஆலையில் மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
உளுந்து மாவு- 1 கிண்ணம்
சிவப்பு அரிசி மாவு- கால் கிண்ணம்
கருப்பட்டி- 1 கிண்ணம் (தூளாக்கியது)
நீர்- 1 கிண்ணம்
நல்லெண்ணெய்- கால் கிண்ணம்

செய்முறை:

கருப்பட்டியில் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அடி கனமான வாணலியில் மாவைப்போடவும்.

கருப்பட்டி கரைந்ததும் மாவில் அதை வடிகட்டவும். எண்ணெயில் பாதியை அதில் ஊற்றவும்.

மாவு கரையும் வரை கலக்கவும். நன்கு கரைந்தவுடன் அடுப்பில் வைக்கவும்.

அளவான தீயில் கிண்டிக் கொண்டே இருக்கவும். களியை ஈர விரலால் தொட்டுப் பார்த்தால் ஒட்டாத போது இறக்கிவிடலாம்.

(ஐந்திலிருந்து பத்து நிமிடமாகும்) மீதி எண்ணெயை களியின் மீது ஊற்றித் தொட்டு சாப்பிடவும்.

இது ஒரு சாரிவிகித உணவு. கருப்பு உளுந்து, சிவப்பு அரிசி, கருப்பட்டி மூன்றிலும் இரும்பு சத்து உள்ளது.

உளுந்தில் புரத சத்தும் உள்ளது. சிவப்பு அரிசி, கருப்பட்டியில் மாவு சத்தும் உள்ளது.

எண்ணெயில் கொழுப்பு சத்து உள்ளது. மிதமான தீயில் கிண்டினால் மென்மையாக இருக்கும்.  

மரகத மீனாட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT