நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 9

செ.குளோரியான்

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணன்தன்
வாடாத மலர்அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்ற,
வீடுஆடி வீற்றுஇருத்தல் வினைஅற்றது, என்செய்வதோ,
ஊடுஆடு பனிவாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே.

அங்குமிங்கும் அலைகிற பனிவாடைக்காற்றே,

நாள்தோறும், தேடுவதற்கு அரிய மலர்களைத் தேடி, நாராயணனின் வாடாத மலர்த்திருவடிகளில் வைத்து வணங்க வேண்டும், அதற்காகதான் எம்பெருமான் இவ்வுயிர்களைப் படைத்திருக்கிறான்.

ஆனால் நானோ, அவனைப் பிரிந்த துயரத்தில் வீட்டினுள் இருக்கிறேன், அவனுக்குச் சேவை புரிவதில்லை, இது முறையா? நான் என்ன செய்வேன்?

இதைப்பற்றி நீ அவனிடம் பேசி வா. ஒருவேளை சரியான பதில் கிடைக்காவிட்டால், என் உடலை இரண்டாகப் பிளந்துவிடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT