நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 72

நாள்தோறும் நம்மாழ்வார்

முதலாம் திருஉருவம் மூன்றுஎன்பர், ஒன்றே
முதல்ஆகும் மூன்றுக்கும்என்பர், முதல்வா,
நிகர்இலகு கார்உருவா, நின்அகத்ததுஅன்றே
புகர்இலகு தாமரையின் பூ.

முதல்வனே,

எல்லாவற்றுக்கும் காரணமாக அமைகிற திருஉருவங்கள் மூன்று (மும்மூர்த்திகள்) என்று சிலர் சொல்வார்கள்,

இன்னும் சிலர், மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்ட இன்னொரு தத்துவம் உண்டு என்பார்கள்,

மேகம்போல் திகழும் உருவத்தைக்கொண்டவனே, உனக்குள் இருந்துதானே ஒளிமிகுந்த தாமரைப்பூ தோன்றியது, (அதில் பிரம்மன் தோன்றினான், அவனே சிவனை உண்டாக்கினான், ஆகவே, நீதான் அனைவருக்கும் தலைவன் என்பது விளங்குகிறது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT