நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 73

நாள்தோறும் நம்மாழ்வார்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர்என்றும் காண்தோறும், பாவியேன்
மெல்ஆவி மெய்மிகவே பூரிக்கும், அவ்அவை
எல்லாம் பிரான்உருவே என்று.

பூவைப்பூ, காயாம்பூ, நீலப்பூ, மலர்கின்ற செங்கழுநீர்ப்பூ ஆகியவற்றைப் பார்க்கும்போதெல்லாம், பாவியாகிய என்னுடைய மென்மையான ஆவியும் உடலும் மிகுதியாகப் பூரித்துப்போகும், காரணம், அவையெல்லாம் எம்பெருமானுடைய உருவமாகத் திகழ்கின்றனவே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT