நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 63

நாள்தோறும் நம்மாழ்வார்

பின்துரக்கும் காற்றுஇழந்த சூல்கொண்டல் பேர்ந்தும்போய்
வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீஅரக்கி மூக்கும்
பருச்செவியும் ஈர்ந்த பரன்
.

காற்றானது மேகத்தைப் பின்னாலிருந்து தள்ளுகிறது, ஒருகட்டத்தில் அந்தக் காற்று வலுவிழந்துபோகிறது, கார்மேகம் கடலில் விழுந்துவிடுகிறது,

கடலிலிருந்து பிறந்த மேகம், கடலுக்கே திரும்பச் செல்லுகிற இந்தக் காட்சி எப்படியிருக்கிறது தெரியுமா? அன்றைக்குத் தீய எண்ணம்கொண்ட அரக்கியான சூர்ப்பனகையின் மூக்கையும் பருத்த காதையும் அறுத்த எம்பெருமான், அழகிய, சிவந்த சக்ராயுதத்தைக் கொண்டவன், தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதும் பெரிய அலைகளைக்கொண்ட பாற்கடலுக்குத் திரும்பினாற்போல் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT