நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால், தண்வாடாய்,
அடல்கொள்படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ, ஊழிதோறு ஊழியே.

குளிர்ச்சியான வாடைக்காற்றே, சூரியன், சந்திரன் எனும் சுடர்கள் தோன்றுகிற பகலிலும் இரவிலும் நீ தூங்குவதில்லை, கடல், மலை, வானம் என்று திரிந்துகொண்டே இருக்கிறாய், என்ன ஆயிற்று? நீயும் எங்களைப்போல் எம்பெருமான் மீது நேசம்கொண்டாயோ? பகைவர்களின் மிடுக்கை வெல்லுகிற சக்ராயுதத்தை ஏந்திய அந்த அம்மானைக் காண்பதற்காக நெடுங்காலமாக நோய்கொண்டாயோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT