நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

மயர்வுஅற என்மனத்தே மன்னினான்தன்னை,
உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றையை,
அயர்வுஇல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினை என்சொல்லி யான்விடுவேனோ?

என்னுடைய அறியாமையைப் போக்குவதற்காக என் மனத்தில் நிலைபெற்றிருக்கிறவன் எம்பெருமான், உயர்வை மட்டுமே தரும் ஒளிமிகுந்த சுடர்க்கற்றை, மறதியில்லாத அமரர்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கிற ஆதிக்கொழுந்து, இத்துணைச் சிறப்புகளைக்கொண்ட பெருமானை நான் வணங்க இசைந்தேன், அந்த இசைவும் அவனே ஆனான், இத்தகைய பெருமானை நான் என்னசொல்லி விலகுவேன்? (ஒருபோதும் விலகமாட்டேன்!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT