நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1

செ.குளோரியான்

பாடல் 1

வேய் மரு தோள் இணை மெலியுமாலோ,
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ,
கண மயில் அவை கலந்து ஆலுமாலோ,
ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ, தாமரைக்
கண்கள் கொண்டு ஈர்தியாலோ,
தகவு இலை, தகவு இலையே நீ கண்ணா.

கண்ணா, உன்னைப் பிரிந்து என்னுடைய மூங்கில்போன்ற தோள்கள் இரண்டும் மெலிகின்றன, என்னுடைய மெலிவையும் தனிமையையும் பார்க்காமல் அழகிய குயில்கள் கூவுகின்றன, மயில் கூட்டங்கள் கலந்து ஆடுகின்றன, பசுக்கூட்டங்களை மேய்ப்பதற்காக நீ செல்கிறாய், நீ திரும்பிவரும்வரை நான் ஏங்கிக் காத்திருக்கிறேன், ஒரு பகல் எனக்கு ஆயிரம் ஊழிக்காலங்களைப்போல் தோன்றுகிறது, தாமரைபோன்ற திருக்கண்களால் என்னைத் துன்புறுத்துகிறவனே, இது நியாயமில்லை, நியாயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT