நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 2

செ.குளோரியான்

பாடல் 2

தகவு இலை, தகவு இலையே நீ, கண்ணா,
தட முலை புணர்தொறும், புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து, அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து, அது கனவு என நீங்கி, ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள்புக்கு,
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ,
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்,
வீவ, நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

கண்ணா, நீ செய்வது நியாயமில்லை, நியாயமில்லை. என்னுடைய பெரிய மார்பகங்களை அணைத்துக் கலக்கிறாய், அந்தக் கலவியின் தீராத சுக வெள்ளம் வானைக் கடந்து அறிவை மூழ்கடித்துச் சூழும்போது, அது கனவு என்பதுபோல் நீ நீங்கிச் செல்கிறாய். உயிரின் உள்ளே உள்ளே புகுந்து தாங்கமுடியாத ஆசை பெருகுகிறது, அடடா, இப்படி உன்னை நான் மிகுதியாகப் பிரிந்து வாடும்படி நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்கிறாய். இனி அப்படிச் செல்லாதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT