நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல் - 11

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.

இந்த உலகத்திலும், பரமபதத்திலும் திருமாலைத்தவிர வேறேதும் இல்லை என்பதைக் கண்டு, அப்பெருமானின் தன்மையை அறிந்துகொண்டார் வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன். அவர் அந்தத் தன்மையை ஆயிரம் திருப்பாடல்களாகப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து திருப்பாடல்களையும் எந்தமுறையில் சொன்னாலும் இறைவன் அனுபவம் என்கிற இன்பம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT